என்ன செய்தாலும் அக்குளில் உள்ள கருமை போகவில்லையா..?? அப்போ ஆரஞ்சை இப்படி யூஸ் பண்ணுங்க..!!

Photo of author

By Sakthi

என்ன செய்தாலும் அக்குளில் உள்ள கருமை போகவில்லையா..?? அப்போ ஆரஞ்சை இப்படி யூஸ் பண்ணுங்க..!!

நம்மில் ஒரு சிலர் ஆரஞ்சு பழத்தை வேண்டி விரும்பி சாப்பிடுவோம். ஆரஞ்சு பழத்தில் சத்துக்கள் இருக்கின்றது என்பதால் நாம் பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எரிந்து விடுவோம். அந்த தோல் எவ்வாறு எல்லாம் மருந்துப் பொருளாக பயன்படுகிறது என்று இங்கு யாருக்கு எல்லாம் தெரியும். 

இந்த ஆரஞ்சு பழத் தோலானது பல நன்மைகளை வழங்கும் ஒரு பொருட்களில் ஒன்று. வழக்கமாக நாம் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன். தோலை நாம் கண்ணில் பிழிந்து விட்டு விளையாடுவோம். ஆனால் இந்த பதிவில் தூக்கி எறியப்பட்டும் ஆரஞ்சு பழத் தோலை வைத்து அக்குள் கருமையை எவ்வாறு மறையச் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்…

* ஆரஞ்சு பழத் தோல்

* பால்

* ரோஸ் வாட்டர் 

செய்முறை… 

முதலில் ஆரஞ்சுப் பழத் தோலை வெயிலில் காய வைத்து அதை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு. சிறிய பவுல் ஒன்று எடுத்து அதில் ஆரஞ்சுப் பழத் தோல் பொடி சேர்த்துக் கொள்ளவும். பின்னர். இதில் ரோஸ் வாட்டர், பால் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

இந்த கலவையை கருமையாக இருக்கும் அக்குள்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழிந்து அக்குள்களை குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி விடலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.