என்ன செய்தாலும் வியர்வை நாற்றம் போகவில்லையா!!அப்போ இந்த இரண்டு முறைகளை பின்பற்றுங்க!!!

Photo of author

By Sakthi

என்ன செய்தாலும் வியர்வை நாற்றம் போகவில்லையா!!அப்போ இந்த இரண்டு முறைகளை பின்பற்றுங்க!!!

Sakthi

No matter what you do, the smell of sweat does not go away!! Then follow these two methods!!!

என்ன செய்தாலும் வியர்வை நாற்றம் போகவில்லையா!!அப்போ இந்த இரண்டு முறைகளை பின்பற்றுங்க!!!

வெயில் காலங்களில் நமக்கு வியர்வை அதிகமாக சுரக்கும். இந்த வியர்வை அதிகமாக சுரப்பதால் நம் உடலில் ஒரு வகையான நாற்றம் ஏற்படும். இந்த வியர்வை நாற்றத்தை நீக்க நாம் என்ன செய்தாலும் அது சரியாகமல் நம் உடலில் வியர்வை நாற்றம் அடிக்கும். இந்த வியர்வை நாற்றத்தை போக்க இந்த பதிவில் சிறந்த இரண்டு வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.

நம் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை நீக்குவதற்கு எலுமிச்சை, உப்பு, சந்தனம், ரோஸ் வாட்டர், மஞ்சள் இவையெல்லாம் வைத்து  நீக்கலாம். இந்த பொருள்களை வைத்து எவ்வாறு எவ்வாறு வியர்வை நாற்றத்தை நீக்குவது என்று பார்க்கலாம்.

வியர்வையை போக்க முதல் செயல்முறை…

வியர்வையையும், விமர்வை நாற்றத்தையும் போக்குவதற்கு முதலில் நாம் குளிக்கும் தண்ணீரில் மேற்கூறிய பொருள்களில் சிலவற்றை சேர்த்து குளிக்கலாம்.

அதாவது முதலில் நாம் தினசரி குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை சாறை கலக்க வேண்டும். பின்னர் இதில் கால் தேக்கரண்டி உப்பையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதை கால் மணி நேரம் அதாவது 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும்.

15 நிமிடங்கள் கழிந்து பின்னர் இந்த தண்ணீரை வைத்து நாம் குளிக்கலாம். இவ்வாறு தினசரி குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.

வியர்வை நாற்றம் நீங்க இரண்டாவது செயல் முறை…

நம் உடலில் வியர்வை மூலம் ஏற்படும் இந்த வியர்வை நாற்றம் நீங்குவதற்கு மஞ்சள், சந்தனம், ரோஸ் வாட்டரையும் பயன்படுத்தலாம்.

இதற்கு முதலில் சந்தனம், மஞ்சள் இரண்டையும் எடுத்துக் கொள்ளவும். பின்னர் ரோஸ் வாட்டரை எடுத்துக் கொள்ளவும். இந்த ரோஸ் வாட்டரில் சந்தனம் மற்றும் மஞ்சளை கலந்து கொள்ளவும்.

பின்னர் இந்த கலவையை வியர்வை ஏற்படும் அக்குள் போன்ற பகுதிகளில் இரவு நேரத்தில் தேய்த்து விட்டு படுக்கவும். மறுநாள் காலையில் எழுந்தவுடன் இதை சுத்தம் செய்து விடலாம்.  இவ்வாறு செய்வதால் கெட்ட பேக்டீரியாக்களை அழிந்துவிடும். மேலும் வியர்வை மூலம் ஏற்படும் துர்நாற்றம் குறையும்.