என்ன செய்தாலும் சளி குணமாகவில்லையா? அப்போ மிளகை இப்படி பயன்படுத்துங்க! 

Photo of author

By Sakthi

என்ன செய்தாலும் சளி குணமாகவில்லையா? அப்போ மிளகை இப்படி பயன்படுத்துங்க!
மழைகாலம் வந்து விட்டாலே சதித் தொல்லை அதிகமாகி விடும். சளி என்பது தீராத தொற்று நோய் ஆகும். சளி பிடித்துவிட்டால் அனைவரும் மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிடுவார்கள். அதே போல மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறுவார்கள். இவ்வாறு பல விதமான வைத்தியங்கள் செய்தாலும் சளித் தொற்று குணமாகாது.
சளி பிடித்துவிட்டால் உடனேயே தும்மல், இருமல், மூக்கடைப்பு போன்ற பலவிதமான பிரச்சனைகளும் ஏற்படும். எனவே பலவிதமான பிரச்சனைகளை கொடுக்கக் கூடிய சளித் தொல்லையை குணப்படுத்த மிளகை பயன்படுத்தி செய்யக் கூடிய எளிமையான வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்…
* மிளகு
* நெய்
* தேன்
மிளகை பயன்படுத்தி சளித் தொல்லையில் இருந்து எளிமையாக விடுபடலாம். மிளகு சளியை மட்டுமில்லாமல் இருமல் போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்தும். இந்த வீட்டு வைத்தியத்தை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலி ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் எடுத்து வைத்துள்ள மிளகை அந்த நெய்யில் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
நன்கு வறுத்த பின்னர் மிளகை மிக்சி ஜார் ஒன்றில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய பவுல் ஒன்றுக்கு இந்த மிளகு பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதில் தேன் சேர்த்து நன்கு கலந்து விட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் இதை சாப்பிட்டால் சளி குணமாகும்.