இனி தெரியாத நம்பரிலிருந்து அழைப்பு வராது? வாட்ஸ் ஆப்பில் வெளிவந்துள்ள புதிய அப்டேட்
வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் புதிய அப்டேட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200 கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அடிக்கடி வாட்ஸ் ஆப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து மெட்டா நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு நாளுக்கு நாள் சிறப்பிக்கும் நோக்கத்தில் புதிய அப்டேட்களை அறிவித்து கொண்டே வருகிறது.
சில நாட்கள் முன்பு வாடிக்கையாளர்களுக்கு வசதியாக தங்கள் பழைய போனில் இருக்கும் அனைத்து தகவல்களையும் புதிய போனிற்கு எளிதாக மாற்றி கொள்ளும் வசதியை அறிவித்திருந்தது. இதன் மூலம் மெசேஜ், போட்டோ, வீடியோ மற்றும் ஆடியோ போன்ற விவரங்களை எளிதாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது.
ஆனால் வாட்ஸ் ஆப் செயலி மூலம் அதிக அளவில் ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகிறது. இவ்வாறு மோசடி நடக்காமல் தடுக்க வாட்ஸ் ஆப் தற்போது புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது. அந்த புதிய வசதி silence unknows callers ஆகும். வாட்ஸ் அப் புதியதாக பயன்படுத்துவர் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தாலோ குறுஞ்செய்தி வந்தாலோ அதன் விளைவுகள் பற்றி அறியாமல் அட்டென்ட் செய்கிறார்கள்.
இதனால் பல மோசடிகள் நடைபெறுகிறது. மேலும் ஒரு லிங்கை கிளிக் செய்தால் உங்கள் வங்கியில் இருக்கும் பணம் மற்ற வங்கிக்கு மாறுவது போன்ற மோசடிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இது போன்று மோசடி நடக்காமல் தடுக்க வாட்ஸ் ஆப் செட்டிங் சென்று பிரைவசி பக்கத்தை ஆக்டிவெட் செய்வதன் மூலம் காண்டாக்டில் பதிவு செய்து வைத்த எண்ணிலிருந்து மட்டும் அழைப்பு வரும் என்றும் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வராது என்று தெரிவித்துள்ளது.
ஆனால் நோட்டிபிகேஷனில் மட்டும் காட்டும் என்று அறிவித்துள்ள்ளது. இதனால் பல ஆபத்துகளிலிருந்து விலக முடியும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் இந்த புது அப்டேட் வாட்ஸ் ஆப் வாடிக்கையார்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.