முகத்தை ஜொலிக்க செய்ய இனி கெமிக்கல் புராடெக்ட் வேண்டாம்!! 2 பொருள் இருந்தால் இனி நாமே க்ரீம் செய்யலாம்!!

Photo of author

By Divya

பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால் தங்கள் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.முகத்தில் கரும் புள்ளிகள்,பருக்கள்,தழும்புகள் இல்லாமல் சருமம் பால் போன்று வெள்ளையாகவும்,பஞ்சு போன்று மென்மையாகவும் இருக்க வேண்டும் என்பது பலரின் ஆசை.

இத்தகைய சருமத்தை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் பேக்கை தொடர்ந்து முயற்சித்து வாருங்கள்.நிச்சயம் எதிர்பார்க்கும் பலனை கண் கூட காண முடியும்.

தேவையான பொருட்கள்:-

1)ஓட்ஸ்
2)கெட்டி தயிர்

செய்முறை விளக்கம்:-

முதலில் 25 கிராம் அளவிற்கு ஓட்ஸ் எடுத்துக் கொள்ளவும்.இதை வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும்.அதன் பின்னர் மிக்ஸி ஜார் ஒன்றை எடுத்து வறுத்த ஓட்ஸை போட்டு பொடித்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி இரண்டு தேக்கரண்டி கெட்டி தயிர் சேர்த்து இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஊறவிடவும்.இந்த ஓட்ஸ் பேக்கை முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் முகம் பளபளப்பாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வாழைப்பழம்
2)தேன்
3)காபி தூள்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கனிந்த வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு க்ரீம் பதத்திற்கு அரைக்கவும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் அரை தேக்கரண்டி காபி தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

இந்த க்ரீமை முகம் முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு காய விடவும்.அதன் பிறகு குளிர்ந்த நீரை முகத்தை கழுவி சுத்தப்படுத்தவும்.இந்த வாழைப்பழ பேஸ் பேக்கை பயன்படுத்தினால் முகம் மிருதுவாக இருக்கும்.