செந்தில் பாலாஜி குறித்து இனி கமென்ட் அடிக்க கூடாது.. பாஜக நிர்வாகியை அடக்கி வாசிக்க சொன்ன நீதிமன்றம்! 

Photo of author

By Rupa

செந்தில் பாலாஜி குறித்து இனி கமென்ட் அடிக்க கூடாது.. பாஜக நிர்வாகியை அடக்கி வாசிக்க சொன்ன நீதிமன்றம்! 

Rupa

No more comments about Senthil Balaji.

செந்தில் பாலாஜி குறித்து இனி கமென்ட் அடிக்க கூடாது.. பாஜக நிர்வாகியை அடக்கி வாசிக்க சொன்ன நீதிமன்றம்!

ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் இதர கட்சி நிர்வாகிகளை விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி டி ஆர் நிர்மல் குமார் திமுகவை குறித்தும் அந்த நிர்வாகிகள் குறித்தும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்துள்ளார். இது குறித்து அவ்வபோது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு போடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக திமுக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பல அவதூறு கருத்துக்களை பரப்பி உள்ளார்.

தொடர்ந்து தன்னை அவதூறாக பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் பல கருத்துக்களை  பரப்பி வருகிறார் எனக் கூறி ,செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தொடர்ந்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை குறித்து தவறுதலான  கருத்துக்களை பேசி வருவது குறித்து பாஜக நிர்மல் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் அவ்வாறு அனுப்பப்பட்ட நோட்டீசை சிறிதும் கூட மதிக்கவில்லை.அதனைமீறி அவரது சமூக வலைத்தளத்தில் தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இனி பாஜக தொழில்நுட்ப தலைவர் நிர்மல் குமார், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட கூடாது. அவ்வாறு பதிவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற்று வரும் இந்த வழக்குக்கு நிர்மல் குமார் தக்க பதிலளிக்க வேண்டும் எனக் கூறி உத்தரவை பிறப்பித்தார். வரும் 29ஆம் தேதி இந்த வழக்கை ஒத்தி வைப்பதாக கூறினார்.