நாய் கடி பாம்பு கடிக்கு இனி பயமே இல்லை.. 24 மணி நேரமும் செயல்படும்!! பொது சுகாதாரத்துறை போட்ட ரூல்ஸ்!!

Photo of author

By Rupa

நாய் கடி பாம்பு கடிக்கு இனி பயமே இல்லை.. 24 மணி நேரமும் செயல்படும்!! பொது சுகாதாரத்துறை போட்ட ரூல்ஸ்!!

தமிழகத்தில் சமீப காலமாக நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. குறிப்பாக சாலைகளில் நடந்து கொண்டிருக்கும் சிறுவர்கள் சிறுமிகளை அங்குள்ள தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு தாக்குகிறது. சமீபத்தில் பல மாவட்டங்களில் இவ்வாறு குழந்தைகளின் தாக்கும் வீடியோவானது வெளியாகி வைரலானது. இரண்டு தினங்களுக்கு முன்பு கூட சாலையில் நடந்து செல்லும் மாணவி ஒருவரை திடீரென்று அங்கிருந்து நாய் ஒன்று கடித்து குதறியது. இதில் அந்த மாணவி கீழே விழுந்தும் அந்த நாய் விடவில்லை. இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

இந்த நாய் கடிக்கு ஆளாகுபவர்கள் முறையான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் ரேபிஸ் என்ற நோய் வந்துவிடுகிறது. அவர்களின் நடவடிக்கையை நாயை போலவே மாற்றி விடுகிறது.அதேபோல கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் நாய் கடியால் கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இது குறித்து அறிக்கையை பொது சுகாதாரம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறது.

அந்த வகையில் இனிவரும் நாட்களில் நாய் கடி மற்றும் பாம்பு கடி உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதத்தில் 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படும் என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இனிவரும் நாட்களில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் கட்டாயம் 24 மணி நேரம் செயல்படும் என்று பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டதையடுத்து அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் வைத்திருக்க வேண்டுமென்று கூறியுள்ளனர்.