இனி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம்? குறைத்தீர்ப்பு முகாமில் எடுத்த நடவடிக்கை!

Photo of author

By Rupa

இனி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம்? குறைத்தீர்ப்பு முகாமில் எடுத்த நடவடிக்கை!

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு ஆண்டுத்தோறும் 100 நாட்களுக்கு வேலை வழங்கப்படும். இதை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்களுக்கு உடல் உழைப்யே சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.  வாலாஜாபாத் ஒன்றியத்தியத்தில் 61 ஊராட்சி உள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் நேற்று கூட்டம் நடைபெற்றது.  வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் மாதம்தோறும் நடைபெறும்.

வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2வது செவ்வாய்க்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.  இதில் தேவேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்தார். மாற்றுத்திறனாளின் புகார் மனுவில் கூறியிருப்பது, ரூ281 முழு சம்பளம் முழுமையாக வந்து சேர்வதில்லை. ஊராட்சிகளில் தொலை தூரங்களில் சென்று  பணியாற்ற இயலாதபோது, எங்களால் முடிந்த பணிகளை ஊராட்சிகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளின் பலருக்கு 100 நாள் வேலை அட்டைகள் இல்லாத நிலையில் உள்ளனர். அதனை மீண்டும் புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் வலியுறுத்தி கூறினர். இந்த மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் கலந்து கொண்டு 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பணிகளை மேற்பார்வையிட்டர்.