இனி ஆயுள் காப்பீட்டிற்கு GST வரி கிடையாது!! விரைவில் குட் நியூஸ் சொல்லப்போகும் மத்திய அரசு!!

0
50
No more GST on life insurance!! The central government will give good news soon!!
No more GST on life insurance!! The central government will give good news soon!!

இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி(GST) வரை நடைமுறையில் உள்ளது.கடந்த 2000 ஆம் ஆண்டு GSTக்கு சட்டம் உருவாக்க குழு அமைக்கப்பட்டு 17 வருடங்கள் கழித்து கடந்த 2017 ஆம் ஆண்டு GST மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

GST ஒரு மறைமுக வாரியாகும்.இந்த புதிய வரிவிதிப்பின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒன்றரை லட்சம் கோடி வருமானமாக கிடைத்து வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் GST இரண்டு லட்சம் கோடி வசூல் ஆகியிருக்கிறது.

உள்நாட்டு வர்த்தகம் அதிகரிப்பால் GST வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதில் CGST,SGST,IGST என்று மூன்று வகைகள் இருக்கிறது.CGST என்றால் மத்திய அரசின் உள் மாநில விற்பனை வரியாகும்.SGST என்றால் மாநில அரசின் உள் மாநில விற்பனை வரியாகும்.IGST என்றால் மாநிலங்களுக்கிடையேயான விற்பனை வரியாகும்.GSTக்கு முன்னர் கலால் வரி,V மாநில வாட் வரி,சொகுசு வரி,Ess வரி,சுங்க கூடுதல் வரி,நுழைவு வரி போன்றவை நடைமுறையில் இருந்தன.ஆனால் தற்பொழுது இந்த GST வரி அனைத்து வரிகளையும் மாற்றியுள்ளது.

மேலும் இந்த GST வரி அனைத்து காப்பீட்டு திட்டங்களுக்கும் அடங்கும்.இதனால் ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு தவணைக்கு GST இல் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொடர் கோரிக்கை காரணமாக அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைப்படி அடுத்த மாதம் நடைபெறவிருக்கின்ற GST கவுன்சில் கூட்டத்தில் ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு தவணைக்கு GST இல் விலக்கு அளிப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.