இனி ஓட்டுப் போட வேண்டுமென்றால் சத்தியம் செய்ய வேண்டும்!
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6 தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் பல ஊழல்கள் நடக்க இருக்கும்.இதைத்தொடர்ந்து சூரிய பகவன் தாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் அவர் கூறியது,வாக்குசாவடிகளில் மக்கள் நுழைவதற்கு முன்பாக அனைவரும் நாங்கள் ஓட்டிற்கு பணம் வாங்கவில்லை என சத்தியம் செய்து விட்டு மக்கள் ஓட்டுப் போட வாக்குசாவடிக்குள் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனு மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அவரது கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.இதனையடுத்து அவர் கூறியது,பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடக் கூடாது என அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.இந்த மனுதாரர் வைத்துள்ள கோரிக்கை மீது எந்தவித ஆணையும் பிரபிக்கப்படாது எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தையும்,அரசையும் அணுகும்படி வழக்கை முழுமையாக முடித்து வைத்தார்.