இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு

Photo of author

By Anand

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு

தமிழகத்தில் பெருகிவரும் குற்றசெயல்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்த்துறை எடுத்து வருகிறது.

அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கத்தி, அரிவாள் போன்றவை உற்பத்தி செய்யும் இரும்பு பட்டறைகளில் சிசிடிவி பொருத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஆயுதம் வாங்குவோரின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட பட்டறை உரிமையாளர்கள் வாங்கி வைக்கவும் காவல்துறையினர் ஆணையிட்டுள்ளனர்.