இனி உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் இல்லை! உலக சுகாதார நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Sakthi

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரையில் 39 நாடுகளில் இந்த நோய் தோற்று பரவியிருக்கிறது. உலகளவில் 72 உயிரிழப்புகள் உட்பட 3,100க்கும் மேற்பட்டோர் குரங்கம்மைநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

29 உயிரியலாளர்கள் மற்றும் மற்ற ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு கடந்த வாரம் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என்று பொது அழைப்பு விடுத்தது. இதுதொடர்பாக அவர்கள் தெரிவிக்கும்போது குரங்கு அம்மை வைரஸ் பரவல் ஆப்பிரிக்காவின் தெளிவான தொடர்பு இல்லாமல் கண்டறியப்பட்டிருக்கிறது என்றும், கூறப்பட்டுள்ளது.

பிரதானமான ஊடகங்களில் அம்மை புண்களை சித்தரிக்க ஆப்பிரிக்க நோயாளிகளின் புகைப்படங்களை பயன்படுத்துதல் உள்ளிட்டவை பாகுபாடு மற்றும் களங்கம் உண்டாக்குவதாக இருக்கிறது என்று ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் நிபுணர்களுடன் இணைந்து குரங்கு அம்மை நோயின் பெயர்களை மாற்றுவது மற்றும் அது ஏற்படுத்தும் நோயின் பெயரை மாற்றுவது தொடர்பாக செயல்பட்டு வருகிறது என்று உலக சுகாதார நிறுவன இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து குரங்கு அம்மை என்ற இந்த வைரஸ் தொற்று மிக விரைவில் புதிய பெயரில் அழைக்கப்படும் என சொல்லப்படுகிறது.