இனி இரவு நேர ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு!

Photo of author

By Rupa

இனி இரவு நேர ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு!

Rupa

No more night time curfew! Government's sudden order!

இனி இரவு நேர ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் முடிந்தும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.தற்போது கொரோனாவானது 3 வது 2 வது என்ற அலை உருவாகி வேகமாக பரவி வருகிறது.மக்கள் பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்கும் படி அரசாங்கம் நாளுக்குநாள் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படியும் விழிப்புணர்வு செய்து வருகிறது.

ஆனால் எவ்வித தடுப்பூசிக்கும் கட்டுக்குள் அடங்காத இந்த கொரோனாவிலிருந்து  மக்களை பாதுகாக்க இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டு வருகிறது.அந்தவகையில் ஓடிசாவில் 10 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது.இந்த ஊரடங்கானது இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தொடரும் எனக் அவ்வரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதனையடுத்து குஜராத்திலும் அதிக அளவு கொரோனா தொற்று பரவுவதாதல் மக்கள் நலன் கருதி அவ்வரசாங்கமும்  இரவு நேர ஊரடங்கை போட்டுள்ளது.அதிலும் அம்மாநிலத்தின் முக்கிய 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கனாது இன்று முதல் போடப்பட்டுள்ளது.இந்த ஊரடங்கானது இரவு 8 மணி முதல் அடுத்தநாள் காலை 6 மணி வரை தொடரும் எனக் கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி திருமணம் மற்றும் விசேஷ திருவிழாக்களை ஒத்தி வைக்கும்படி அம்மாநிலத்தின் முதலைமச்சர் கூறியுள்ளார்.

திருமண விழாக்கள் அதிகபட்சமாக 200 பேருக்கும் குறைவாகவே அனுமதிக்கப்படும் என்று தெரவித்துள்ளனர்.இறுதிச்சடங்கு தொடர்புடிய நிகழ்சிகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர்.உடற்பயிற்சி கூடங்கள்,பூங்காக்கள் என அனைத்தும் மூடப்பட்டன.இரவு 8 மணிக்கு பின்னர் அனைத்து உணவகங்கள்,கடைகள் திறந்திருக்க அனுமதி கிடையாது.

இருப்பினும் உணவு பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று விநியோகம் செய்ய அவ்வரசு அனுமதி அளித்துள்ளது.இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது இம்மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்கும் எனக் கூறியுள்ளனர்.