இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Photo of author

By Rupa

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Rupa

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் தற்பொழுது அரிசி மற்றும் கோதுமை போன்றவற்றின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் பொது விநியோக அரிசி மற்றும் இதர பொருட்களை நிறுத்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் அரிசி மற்றும் இதர பொருள்களின் விலைவாசியை குறைக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு இதனை விற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது நன்மையை அளிக்கக்கூடிய செயல் என்றாலும், மாநில அரசுகள் இதனால் கடுமையான பாதிப்பை சந்திக்கும்.

ஏனென்றால் மத்திய அரசு வழங்கும் மானிய அரிசியானது போதுமான அளவு இல்லாததால் மத்திய அரசும் கூடுதலாக வழங்குகிறது. எனவே மத்திய அரசு தற்போது அரிசி மற்றும் கோதுமை போன்ற பொருட்களை நிறுத்தம் செய்தால் அதனை மாநில அரசுகள் ஈடு செய்வது மிகவும் சிரமம்.

அதுமட்டுமின்றி மத்திய அரசு இவ்வாறு மானிய அரிசி மற்றும் கோதுமைகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்து சற்று லாபம் காண எண்ணுவதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள்,மாநில அரசுகளுக்கு கொடுத்து வந்த மானிய அரிசி நிறுத்தம் செய்யப்பட்டால் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பாதிப்படைய கூடும் எனவே தனியார்க்கு வழங்கும் திட்டத்தை கைவிடும் படி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.