தெலுங்கானா மாநிலத்தில் இனி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. தெலுங்கானா மாவட்டத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியிடப்பட்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்த மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெலங்கானாவில் சமீபகாலமாக தெலுங்கு மொழியின் முன்னணி படத்தை சிறப்பு திரையிடல் செய்ய மாநில அரசு அனுமதி வழங்கி வருகின்றது. உதாரணமாக, ஆர்ஆர்ஆர் போன்ற பெரிய படங்களுக்கு பிரத்யேக காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சலார் திரைப்படம் அதிகாலை 1 மணிக்கு திரையிட அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பாகுபலி – 2 திரைப்படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது போன்று, புஷ்பா – 2 திரைப்படத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் டிசம்பர் 4 ஆம் தேதி அன்று திரையிடப்பட்ட புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து இனி தெலுங்கானா மாநிலத்தில் திரைப்படங்களுக்கான சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்படாது என்று அம்மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.
இது குறித்து தெரிவிக்கப்பட்ட தகவலில், நடிகர் அல்லு அர்ஜூன் முன்னறிவிப்பின்றி திரையரங்குக்கு வந்ததால், கூட்டத்தினர் முந்தியடித்து செல்ல முயற்சித்தனர்.
அப்போது நெரிசல் ஏற்பட்டதில், 35 வயதான ரேவதி என்ற பெண் பலியானார், அவரது 13 வயது மகன் படுகாயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முன்னறிவிப்பின்றி வந்த நடிகர் அல்லு அர்ஜூன் உள்பட படக்குழுவினர் மீதும், திரையரங்கு மீதும் ஹைதராபாத் காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.