கடை ஹேர் டை இனி வேண்டாம்!! வெள்ளைமுடி கருமையாக 10 நிமிடத்தில் அசத்தலான ஹோம்மேட் ஹேர் டை ரெடி!!

Photo of author

By Divya

கடை ஹேர் டை இனி வேண்டாம்!! வெள்ளைமுடி கருமையாக 10 நிமிடத்தில் அசத்தலான ஹோம்மேட் ஹேர் டை ரெடி!!

Divya

உங்கள் வீட்டிலேயே தலைமுடியை கருமையாக மாற்றும் ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாம்.ஹோம்மேட் ஹேர் டை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)டீ தூள் – 3 தேக்கரண்டி
2)மருதாணி பொடி – இரண்டு தேக்கரண்டி
3)நீலி அவுரி பொடி – இரண்டு தேக்கரண்டி
4)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து மூன்று தேக்கரண்டி டீ தூள் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.டீ தூள் நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

2.பின்னர் இந்த டீ தூள் பானத்தை கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.நன்றாக ஆறிய பிறகு இரண்டு தேக்கரண்டி மருதாணி பொடி,இரண்டு தேக்கரண்டி நீலி அவுரி பொடி போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

3.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கலவையை இரும்பு பாத்திரத்தில்தான் செய்ய வேண்டும்.

4.நான்கு முதல் ஐந்து மணி நேரம் நன்றாக ஊறிய பிறகு இந்த டையை பயன்படுத்தலாம்.அதற்கு முன்னர் தலையில் தண்ணீர் ஊற்றி மசாஜ் செய்ய வேண்டும்.அதன் பிறகு தயாரித்து வைத்துள்ள ஹேர் டையை தலை முழுவதும் அப்ளை செய்து ஊறவைக்க வேண்டும்.

அரை மணி நேரம் வரை ஊறிய பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும்.இப்படி செய்தால் வெள்ளை முடி கருமையாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)டீ தூள் – இரண்டு தேக்கரண்டி
2)மருதாணி பொடி – ஒரு தேக்கரண்டி
3)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
4)அவுரி பொடி – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி தேயிலை தூள் அதாவது டீ தூள் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இந்த டீ தூள் தண்ணீரை கிண்ணம் ஒன்றிற்கு வடிகட்டி ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி மருதாணி பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி அவுரி பொடியை அதில் கொட்டி நன்றாக கலக்க வேண்டும்.

பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு எடுத்து அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கலவையை தலைக்கு அப்ளை செய்து நன்றாக ஊறவிட வேண்டும்.அதன் பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் தலைமுடி கருமையாக மாறும்.