கனரக வாகனங்கள் செல்ல இனி நேர கட்டுப்பாடு!! காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

Photo of author

By Priya

கனரக வாகனங்கள் செல்ல இனி நேர கட்டுப்பாடு!! காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் வருவதால் விபத்தடைந்து உயிரழப்புகள் ஏற்பட அபாயம் உண்டாகிறது .

நகரில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள், சவுடு மண் ஏற்றி வரும் வாகனங்கள்  காலை மற்றும் மாலை என்று இரண்டு வேலைகளிலும் அதிக அளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நெரிசலில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்வோர் , வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என்று பலர் அவதிப்படுகின்றனர்.

மேலும் கனரக வாகனங்கள் வருவதால் விபத்துகள் ஏற்படுவது தொடர்கிறது.அதிவேகத்தில் இந்த கனரக வாகனங்கள் வருவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது .

இதனை தடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யாண் கனரக வாகனங்கள் வர நேரக்கட்டுப்பாடு விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் சூப்பிரண்ட் உத்தரவின் படி நகரத்துக்குள் கனரக வாகனங்கள் மற்றும் சவுடு மண் ஏற்றி வரும் வாகனங்கள் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும் , மாலை 4 மணியில் இருந்து இரவு 10  மணி வரையிலும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாரு செய்வதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை கட்டுப்படுத்தலாம்.

மேலும் நகர சாலையில் வரும் கனரக வாகனங்கள் காலை 10 மணியில் இருந்து மாலை 3 மணி வரையிலும் ,இரவு 10  மணியில் இருந்து காலை 8 மணி வரையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.