இனி இங்கு சுங்கச்சாவடிகளுக்கு அனுமதி இல்லை!!! நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  வெளியிட்ட முக்கியமான அறிவப்பு!!!

0
130
#image_title
இனி இங்கு சுங்கச்சாவடிகளுக்கு அனுமதி இல்லை!!! நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  வெளியிட்ட முக்கியமான அறிவப்பு!!!
இனி நான்கு வழிச் சாலைகளில் சுங்கச் சாவடிகள் இயங்குவதற்கு அனுமதி இல்லை என்று தமிழ் நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ வேலு அவர்கள் அறிவித்துள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர்.
தமிழக சட்டசபையின்  மூன்றாவது நாள் இன்று(அக்டோபர்11) நடைபெற்று. வருகின்றது. இன்றைய கூட்டத்தில் தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் பேசினார். அப்பொழுது தமிழகத்தில் சாலைகள் விரிவாக்கப்பட்டு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் பொழுது நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடிகள் அமைக்க அனுமதி இல்லை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பான நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு அவர்கள் “பல பகுதிகளில் 7 அடியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கப்பட்டு 10 அடி நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு வருகின்றது. அவ்வாறு மாற்றப்படும் பொழுது நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதை பார்க்கிறோம்.
அதே சமயம் மாநில நெடுஞ்சாலைகளை 4 வழிச் சாலையாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் முன்பு தெரிவித்திருந்தார். முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கூறியதின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மாநில சாலைகள் அனைத்தும் 4 வழிச் சாலையாக மாற்றப்பட்டு வருகின்றது.
இந்த மாநில சாலைகள் 4வழிச் சாலைகளாக விரிவாக்கம் செய்யப்படும் பொழுது அங்கு சுங்கச் சாவடிகள் அமைக்கப்படாது” என்று அமைச்சர் எ.வ வேலு அவர்கள் கூறியுள்ளார். இவருடைய இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Previous articleராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!!
Next articleவருமான வரி ரீபண்ட் விவகாரம்!! இத்தனை லட்சம் பேரின் கோரிக்கைகள் நிறுத்தி வைப்பு!!