வருமான வரி ரீபண்ட் விவகாரம்!! இத்தனை லட்சம் பேரின் கோரிக்கைகள் நிறுத்தி வைப்பு!!

0
53
#image_title

வருமான வரி ரீபண்ட் விவகாரம்!! இத்தனை லட்சம் பேரின் கோரிக்கைகள் நிறுத்தி வைப்பு!!

நம் இந்திய நாட்டில் வருமான வரி செலுத்துவது அவசியமான ஒன்றாகும்.இந்த வருமான வரியை ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் செலுத்த வேண்டும்.அந்த வகையில் 2022 – 2023 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31 ஆம் தேதி இறுதி நாளாக இருந்தது.

வருமான வரி தாக்கல் செய்ய 2 படிவங்கள் இருக்கிறது.அதாவது படிவம் 1 என்பது
மாத ஊதியம் வாங்குபவர்கள்,மூத்த குடிமக்கள் வருமான வரி செலுத்த பயன்படுத்தும் படிவம் ஆகும்.அதேபோல் படிவம் 2 என்பது வணிக நிறுவனங்கள்,தொழில்துறையினர் மற்றும் ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக ஆண்டு வருவாய் ஈட்டும் தனி நபர் வருமான வரி செலுத்த பயன்படுத்தும் படிவம் ஆகும்.

வருமான வரி ரீபண்ட்:-

ஒரு நபர் தான் கட்ட வேண்டிய வருமான வரியை விட கூடுதலாக செலுத்தி இருந்தால் அவருக்கான ரீபண்ட் தொகை அவரது வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும்.அவற்றை திரும்ப வங்கி கணக்கில் செலுத்துவதற்கான(ரீபண்ட்) அவகாசம் கடந்த ஆண்டில் 26 நாட்கள் என்று இருந்தது.ஆனால் 2022- 2023 ஆம் நிதியாண்டில் அவை 16 நாட்களாக குறைக்கப்பட்டது.இதனால் கூடுதல் வரி செலுத்தியவர்களின் வங்கி கணக்கிற்கு விரைவில் ரீபண்ட் அனுப்பப்படும் என்பதால் வரி செலுத்தும் நபர்களுக்கு இது இனிப்பான செய்தியாக இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டில் ரூ.9 லட்சத்து 57 ஆயிரம் கோடி வருமான வரியாக அரசுக்கு கிடைத்திருப்பதாக வரித்துறையின் நிர்வாக அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா தெரிவித்து இருக்கிறார்.

மேலும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரீபண்ட் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர் இன்னும் 35 லட்சம் பேரின் ரீபண்ட் கோரிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
இதற்கு காரணம் வருமான வரி ரிட்டன் (ITR) படிவத்தில் வரி செலுத்துபவர்கள் தவறான அல்லது முழுமையடையாத தகவலை வழங்கி இருக்கலாம்.அதேபோல் வங்கி விவரங்கள்,முகவரி உள்ளிட்ட ஏதேனும் ஒன்றில் முரண்பாடு இருக்க வாய்ப்பு இருக்கிறது.

இதன் காரணமாக வரி செலுத்தி ரீபண்ட் கோரிக்கை வைத்திருப்பவர்களை கால் சென்டர் மூலமாக வருமான வரி ஊழியர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.இதனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரீபண்ட் விரைவில் உரியவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் என்று நிதின் குப்தா தெரிவித்து இருக்கிறார்.