இனி கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு நோ!! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!
சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் சேகர்பாபு அவர்கள் தற்பொழுது செயல்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில், தற்பொழுது வரப்போகும் திருவண்ணாமலை தீபத்திற்கு மக்கள் வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட திருவண்ணாமலை தீபத்திற்கு மட்டும் 3 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் மற்றும் தீபத்திற்கான முன்னேற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினோம். அதிக மக்கள் கூட்டம் குவிவதால் 400 என்ற எண்ணிக்கையில் தற்காலிகமான தூய்மை பணியாளர்களை நியமிக்க உள்ளோம். மேலும் பழனி கும்பாபிஷேகம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
நில ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மட்டும் தற்பொழுது வரை 3739.49 கோடி அளவில் மீட்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி தற்பொழுது வரை ஆயிரம் கோடி செலவில் 300 கோவில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. சட்டத்தின் விதிமுறைகளை மதித்தேன் அறநிலைத்துறை செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் விஐபி தரிசனம் என்பது உருவாகவில்லை.
விரைவில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும். இந்த மானிட உலகில் அனைவரும் சமம் என்ற நிலையை கொண்டு வர வேண்டும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரித்து வேறுபடுத்தக் கூடாது. அதேபோல பாஜக ஒரு சைத்தான் கட்சி திமுக ஆட்சி நடைபெறும் இந்த வேலையில் சைத்தான்களுக்கு ஒருபோதும் இடமில்லை முதல்வர் மு க ஸ்டாலின் எவ்வளவு பெரிய பேய்களையும் விரட்டி அடிக்கும் அளவிற்கு சக்தி உடையவர். அந்த வகையில் பாஜக சைத்தான் என எந்த ஒரு அவதாரம் எடுத்தாலும் தமிழகத்தில் ஒரு பொழுதும் வேரூன்ற முடியாது இவ்வாறு அவர் பேசினார்.