இனி அலைய வேண்டியது இல்லை அனைத்துக்கும் ஒரே இணையதள சேவை! மத்திய அரசின் புதிய அறிமுகம்! 

0
168
இனி அலைய வேண்டியது இல்லை அனைத்துக்கும் ஒரே இணையதள சேவை! மத்திய அரசின் புதிய அறிமுகம்! 
இனி அலைய வேண்டியது இல்லை அனைத்துக்கும் ஒரே இணையதள சேவை! மத்திய அரசின் புதிய அறிமுகம்! 

இனி அலைய வேண்டியது இல்லை அனைத்துக்கும் ஒரே இணையதள சேவை! மத்திய அரசின் புதிய அறிமுகம்! 

அரசு வழங்கும் 13 ஆயிரம் இணையதள சேவைகளை பெறும் தேசிய அரசாங்க சேவைகள் போர்டல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே திட்டம் என்ற அடிப்படையில் இந்த தேசிய இணையதள சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் மத்திய அரசு வாரியாக, மாநில அரசு வாரியாக, மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் வட்டங்கள் வாரியாகவும் என தனித்தனியாக இணையதள சேவைகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளன.

ஒவ்வொரு இணையதளத்திற்கு வெவ்வேறான வழிமுறைகள் உள்ளதால் மக்களுக்கு இது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதை போக்கும் வகையில் மத்திய அரசு துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை தீட்டியது. பல்வேறு  வழிமுறைகளையும்  வகுத்தது. இதனை அடுத்து மத்திய,மாநில அரசுகளுக்கு மக்கள் பயன்படுத்தும்  ஒரே இணையத்தில்  போர்டல் உருவாக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது,மத்திய, மாநில, மாவட்டம் மற்றும் உள்ளூர் வட்டங்களில் உள்ள அரசு நிறுவனங்களால் வெவ்வேறு இணையதளங்கள் மூலம் மக்கள் தங்களுக்குத் தேவைப்படும் தேவையை அந்தந்த இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அனைத்து சேவைகளும் இப்போது ஒரே தளத்தில் கீழ் வரும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இணையதளம்:

இதன் மூலம் பல்வேறு சேவைகளை நன்கு வகைப்படுத்தப்பட்ட மற்றும் எளிதாக பட்டியலிட்டு தேடும் வகையில் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு  இந்த புதிய இணையதளமான https://services.india.gov.in இல் 15 முக்கிய பொது சேவை துறைகளுக்கு 9,960 க்கும் மேற்பட்ட சேவைகளை இதன் மூலம் நாம் பெற முடியும். இந்த போர்ட்டலில் ஒவ்வொரு குடிமகனும் 13,350 சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பயன்பாடுகள் :-

ஆதார் கார்டு பான் கார்டை இணைக்க, அரசு ஏலத்தில் பங்கேற்க, உங்கள் வரியை தெரிந்து கொள்ள, பிறப்பு சான்றிதழ் பெற, இந்த வலைத்தளத்தின் மூலம், உங்கள் அனைத்து வேலைகளும் விரைவாக நடக்கும்.இதற்காக நீங்கள் எந்த அரசு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால் முதலில் http://services.india.gov.in என்ற லிங்கை கிளிக் செய்யவும். அதன் பிறகு, வலது பக்கத்தில் உள்ள ‘அனைத்து வகை’ விருப்பத்தை கிளிக் செய்யவும். இதன்பிறகு உங்களுக்கு என்ன சேவை வேண்டுமோ அதை கிளிக் செய்து நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

குற்றச்சாட்டு :-

அனைத்து செய்திகளையும் பெற ஒரே இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் ஆயிரக்கணக்கான சேவைகளுக்கு ஒரே இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இது சில குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும்   குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Previous articleஇடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இதுதான் கடைசி நாள்!! மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே முந்துங்கள்!!
Next article“பிச்சைக்காரன் 2” ரீலிஸ் எப்போது? விஜய் ஆண்டனி புதிய தகவல்!!