இனி ஆப் தேவையில்லை.. இதை மட்டும் டச் பண்ணுங்க டெலிட் செய்யப்பட்ட WHATSAPP மெசேஜ் உடனே பார்க்கலாம்!!
உலகிலேயே அதிக பயனர்களை கொண்டிருக்கும் சமூக வலைதள செய்யலியாக வாட்ஸ்அப் உள்ளது.குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இதற்கு முக்கிய காரணம் மெட்டா நிறுவனம் புது புது அம்சங்களை வாட்ஸ்அப் செயலியில் அறிமுகப்படுத்தி வருவது தான்.
பிறரிடம் உரையாடல் நடத்த,வீடியோ காலில் பேச வாட்ஸ்அப் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.இதர செயலிகளை காட்டிலும் வாட்ஸ்அப் பயன்படுத்துவது மிகவும் சுலபமாக இருப்பதால் மக்கள் அதை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் வாட்ஸ்அப் பயனர்களின் புகார்களை ஏற்று அவ்வப்போது ஸ்பேம் கணக்குகளை நீக்கி வருகிறது.மெட்டா நிறுவனம் சமீபத்தில் மெட்டா AI தொழில்நுட்பத்தை வாட்ஸ்அப் செயலில் அறிமுகப்படுத்திருப்பது பயனர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் வாட்ஸ்அப் செயலியில் ஒருவர் அனுப்பிய செய்தியை டெலிட் செய்து விட்டார் என்றால் அதை பார்க்க மூன்றாவது ஆப்பை இனி பயன்படுத்த தேவையில்லை.வாட்ஸ்ஆப்பிள் மோர் செட்டிங்ஸ்க்குள் சென்று சென்று Notifications History-யை பார்த்தால் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ் வரிசையாக ஷோ ஆகும்.எழுத்து வடிவில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை மட்டுமே பார்க்க முடியும்.இந்த ஆப்ஷன் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே உள்ளது.உலகின் விலை உயர்ந்த போனாக இருக்கும் ஐபோன்களில் கூட இந்த வசதி இல்லை.ஆகவே வாட்ஸ்அப்பின் டெலிட் மெசேஜ் பார்க்க இனி பிளே ஸ்டோரில் இருக்கும் மூன்றாவது செயலியை பதிவிறக்கம் செய்யும் நிலை ஏற்படாது.