நரைமுடியை கருமையாக்க ரசாயனம் நிறைந்த பொருட்களை தவிர்த்துவிட்டு கீழ்கண்ட இயற்கை வழியை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)பசு மோர் – ஒரு கிளாஸ்
2)கறிவேப்பிலை – ஒரு கொத்து
3)உப்பு – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் கெட்டி தயிர் அரை கிளாஸ் அளவிற்கு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி மோர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி மோரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த கறிவேப்பிலை மோரை தொடர்ந்து பருகி வந்தால் தலைமுடி கருமையாக மாறும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)கறிவேப்பிலை – கால் கப்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் கால் கப் கறிவேப்பிலையை பறித்து தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கறிவேப்பிலை ஜூஸை வடிகட்டி பருகினால் தலைமுடி கருமையாகவும்,அடர்த்தியாகவும் மாறும்.
தேவையான பொருட்கள்:-
1)கறிவேப்பிலை – ஒரு கப்
2)வர மிளகாய் – இரண்டு
3)வெள்ளை உளுந்து – இரண்டு தேக்கரண்டி
4)கடலை பருப்பு – இரண்டு தேக்கரண்டி
5)உப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
கறிவேப்பிலையை உலர்த்தி எடுத்து கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் வாணலி வைத்து வர மிளகாய்,வெள்ளை உளுந்து,கடலை பருப்பு ஆகியவற்றை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வரை வறுத்த பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இந்த கறிவேப்பிலை பொடியை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் நரைமுடி பிரச்சனையை தவிர்க்கலாம்.