இனி பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்!

Photo of author

By Rupa

இனி பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்!

தற்பொழுது வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும்  யுபிஐ வசதி வந்துவிட்டது. சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் மக்கள் யுபிஐ உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். சமீப காலத்தில் இவ்வாறு யுபிஐ பயன்படுத்தி பணம் அனுப்புவதில் பல குளறுபடிகள் நடந்து வந்தது. அதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தற்பொழுது வரை ஓர் சில இடங்களில் யுபிஐ குளறுபடிகள் நடந்த வண்ணமாகவே தான் உள்ளது.

அப்படி இருக்கையில் தற்பொழுது ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் என்பவர் புதிய யுபிஐ அறிமுகம் செய்துள்ளார்.பட்டன் போன் வைத்திருப்பவர்களும் இந்த புதிய முறையை சுலபமாக பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என கூறியுள்ளார்.அதாவது இனி பட்டன் போன் வைத்திருப்பவர்கள் பணம் அனுப்ப சிரமப்பட தேவையில்லை.தாங்கள் வைத்திருக்கும் போனிலே இந்த யுபிஐ முறையை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.இந்த புதிய முறைக்கும் 123 பே என்றும் பெயர் வைத்துள்ளனர். இந்த 123 பே அதிகளவு கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு பயன்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பட்டன் போன் மூலம் உபயோகிக்கும் இந்த முறைக்கு இன்டர்நெட் தேவையில்லை என்று கூறியுள்ளனர். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் படிக்காதவர்களாவே உள்ளார்கள். இவ்வாறு இருக்கையில் எந்த வகையில் இந்த ,123 பே முறையைப் பயன்படுத்த முடியும். மேலும் அவ்வாறு இருக்கும் மக்களை இந்த யுபிஐ பயன்படுத்துவதை வைத்து எளிதில் ஏமாற்றிவிட முடியும். இது கிராமப்புற மக்களுக்கு பயன்படுமா என்பது பெரிய சந்தேகமே.