தலைமுடி கருமையாகவும்,நீளமாகவும் இருப்பதை தான் பெண்கள் விரும்புகின்றனர்.ஆனால் இக்காலத்தில் சிலருக்கு மட்டுமே நீளமான முடி வளர்ச்சி இருக்கின்றது.மோசமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையால் பெரும்பாலானோர் முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்கின்றனர்.
முடி உதிர்வு ஏற்பட காரணங்கள்:
**மன அழுத்தம்
**ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம்
**கெமிக்கல் பயன்பாடு
**தூக்கமின்மை
**முடி பராமரிப்பின்மை
உங்களுக்கு முடி உதிர்வு அதிகரித்தால் தாமதிக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை செய்து பலனடையுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)ராகி – ஒரு கப்
2)பாதாம் பருப்பு – ஒரு கப்
3)கருப்பு எள் – அரை கப்
4)வெல்லம் – ஒரு கப்
5)முந்திரி பருப்பு – ஒரு கப்
6)ஆளிவிதை – ஒரு கப்
7)நெய் – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு கப் ராகியை போட்டு வறுக்க வேண்டும்.ராகி பொன்னிறமாக வறுபட்டு வந்ததும் இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்க வேண்டும்.
அடுத்து பாதாம் மற்றும் முந்திரி பருப்பை வாணலியில் போட்டு வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.அதேபோல் ஒரு கப் ஆளிவிதை மற்றும் ஒரு கப் கருப்பு எள்ளை தனி தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் மிக்சர் ஜாரை எடுத்து வறுத்து வைத்துள்ள ராகியை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் வறுத்த பாதாம் பருப்பு,முந்திரி பருப்பு,ஆளிவிதை மற்றும் கருப்பு எள்ளை அதில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அகலமான பாத்திரம் ஒன்றை எடுத்து அரைத்த மாவை அதில் கொட்டி கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஒரு கப் வெல்லத்தை பொடித்து மாவில் கொட்டி கலந்துவிட வேண்டும்.
பிறகு கையில் நெய் தடவிக் கொண்டு மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.இந்த உருண்டையை ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த உருண்டையை தினம் இரண்டு சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு நின்று அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.
மேலும் ஆளிவிதையை பொடித்து தேன் சேர்த்து உருண்டை பிடித்து சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.கறிவேப்பிலையை பொடித்து நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.இதுபோன்ற ஆரோக்கிய உணவுமுறை மூலம் முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யலாம்.