ஆதார் கார்டு அப்டேட் செய்ய இனி  வெப்சைட் தேவை இல்லை!! ஈஸியான வழி!!

Photo of author

By Preethi

ஆதார் கார்டு அப்டேட் செய்ய இனி  வெப்சைட் தேவை இல்லை!! ஈஸியான வழி!!

Preethi

No need for website to update Aadhar card anymore !! Easy way !!

ஆதார் கார்டு அப்டேட் செய்ய இனி  வெப்சைட் தேவை இல்லை!! ஈஸியான வழி!!

யுஐடிஏஐ ஆன்லைன் தளத்தில், புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் எஸ்எம்எஸ் வழியிலான ஆதார் சேவைகளை பெற்றுக்கொள்ளும் வசதி மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த வசதி, ஆதார் சேவைகளுக்கான அணுகலை எளிதாக்குகிறது. இதற்காக இன்டர்நெட்-ம் தேவைப்படாது. இது UIDAI-யின் ஒரு அட்டகாசமான ஒரு படியாககப் பாராக்கப்படுகிறது. விர்சுவல் ஐடி ஜெனரேஷன் மற்றும் ரேற்றிவல், ஆதாரை லாக் செய்தல் மற்றும் அன்லாக் செய்தல் போன்ற பல்வேறு சேவைகளுக்கு, இந்த புதிய ‘ஆதார் சர்வீஸ் ஆன் எஸ்எம்எஸ்’ வசதி உதவியாக இருக்கும்.

உங்கள் ஆதார் விஐடி-ஐ ஜெனரேட் செய்ய, உங்கள் GVID <space> உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை டைப் செய்து 1947-க்கு அனுப்பவும்.
இதேபோல், உங்கள் ஆதார் விஐடி-ஐ ரிற்றைவ் செய்ய, உங்கள் RVID <space> ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை டைப் செய்து 1947 க்கு அனுப்பவும்.
GETOTP <space> உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை டைப் செய்து 1947 க்கு அனுப்பவும்.

நீங்கள் OTP-ஐப் பெற்றதும், உடனடியாக UNLOCKUID <space> உங்கள் விஐடி-யின் கடைசி 4 இலக்கங்கள் <space> ஆறு இலக்க OTP-ஐ டைப் செய்து 1974 க்கு அனுப்பவும்.
குறிப்பு: உங்கள் ஆதாரை அன்லாக் செய்ய, உங்களுக்கு விஐடி தேவைப்படும். உங்கள் ஆதாரை லாக் செய்வதற்கு முன்பு நீங்கள் உங்கள் விஐடியை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே முக்கியமானதாகும்.