இனி மருத்துவமனையிலும் முன்பதிவு அவசியம்! முன்பதிவு இல்லையென்றால் சிகிச்சை அளிக்கப்படாது! புதிய உத்தரவு!
கொரோனா ஓராண்டுகாலம் கடந்த நிலையிலும்,தொற்றின் பரவல் சற்றும் குறையாமல் அதிவேகமாக தான் பரவி வருகிறது.கொரோனா தொற்றானது மருத்துவமனையிலிருந்து பரவுவதை தடுக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் அவர்கள் கூறியிருப்பது, மருத்துவமனையிலிருந்து பரவும் கொரோனா தொற்றை தடுக்க நாங்கள் புதிய யுக்தியை பயன்படுத்துகிறோம்.மருத்துவமனையின் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியாது.
அதுமட்டுமின்றி கொரோனா அதிக அளவு பரவி வரும் இந்த வேலையில் அதை கட்டுபடுத்த அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதனால் வரும் 9ஆம் தேதி முதல் ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சை பிரிவுகள் என அனைத்திற்கும் முன் பதிவு செய்து தொலை மருத்துவ ஆலோசனைக்கு பிறகே வெளிப்புற சிகிச்சைகள் நடைபெறும் என அம்மருத்துவமனையினர் அறிவித்துள்ளனர்.வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன் பதிவு பெற வேண்டியது கட்டாயம் என்றும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் எந்த வித முன்பதிவு இன்றியும் நடைபெறும் எனக் கூறியுள்ளனர்.இதற்கான தொலைப்பேசி பற்றிய விவரங்களை www.jipmer.com என்ற இணையதளத்தில் பெறலாம்.அல்லது மக்கள் ஹலோ ஜிப்மர் எனப்படும் ஆண்ட்ராயிடு ஆப் மூலம் வெளிப்புற சிகிச்சைகளுக்கு முன் பதிவு பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர்.முன் பதிவு நோயாளிகளுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி மூலம் மருத்துவர் தொடர்பு கொண்டு தேவைப்படுபவர்கள் மட்டும் மருத்துவமனைக்கு வருவதற்கான குறுஞ்செய்தி அனுப்பி வைப்பர்.
நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறையிலும் 100 நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு வந்து ஆலோசனை பெற அனுமதிக்கப்படுவர் எனக் கூறியுள்ளனர்.மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.கொரோனா தொற்றானது மருத்துவமனையிலிருந்து பரவுவதை தடுக்க இவ்வாறு ஜிப்மர் மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.இதை அனைத்து மக்களும் ஏற்று ஒத்துழைப்பு அழைக்க வேண்டும் என அம்மருத்துவமனை கேட்டுக்கொண்டது.அனைத்து இடங்களிலும் இவர்களின் டெக்னாலாஜி வேலை செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.