இனி பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் எடுக்க தேவையில்லை! நடத்துனர்க்கு சில்லறை கொடுக்கும் பிரச்சனை இல்லை

Photo of author

By Vijay

இனி பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் எடுக்க தேவையில்லை! நடத்துனர்க்கு சில்லறை கொடுக்கும் பிரச்சனை இல்லை

சமீபகாலமாக தமிழக போக்குவரத்து துறைகளில் பல முக்கிய அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மற்றும் அதன் புறநகர் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பயணிக்கும் புறநகர் ரயில்,பேருந்து மற்றும் மெட்ரோ உள்ளிட்டவைகளில் பயணிக்கும் போது டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்குமுன் பயணிக்கும் போது தனித்தனயாகத்தான் பயணச்சீட்டை பெற்றுக்கொண்டு செல்வது வழக்கம். தற்போது தமிழக போக்குவரத்து துறை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ போன்றவைகளில் பயணிக்க ஒரே கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம். அதை விரிவுபடுத்தும் வகையில் தற்போது சில பேருந்துகளில் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் இறங்குமிடம் தானியங்கி மூலம் தெரிவிக்கப்படும். பேருந்துகளில் இருக்கும் QR கருவியை ஸ்கேன் செய்வதன் மூலம் பயணசீட்டை பெற்று கொள்ளலாம் இதை 2025 ஜூன் மாதத்திற்குள் சென்னையிலுள்ள அனைத்து பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் விரிவுபடுத்தவுள்ளனர். இதற்காக புதியதாக 1500 பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளர்.

தற்போது போக்குவரத்துறை மக்களை ஊக்குவிக்கும் வகையில் சில்லறை வாங்குவதை எளிமையாக்க 1800 599 1500 என்ற இலவச அழைப்பு எண்ணை தந்துள்ளது. இதை தொடர்புகொண்டு டிக்கெட் விவரங்களை தெரிவித்தால் நமது மொபைல் UPI மூலம் வங்கி கணக்கிற்கே சில்லறை அனுப்பப்படும். மேலும் நடத்துனரை ஊக்கிவிக்கும் வகையில் தானியங்கி மூலம் அதிக டிக்கெட்களை விற்பனை செய்பவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுமென கூறியுள்ளது.