இதற்கெல்லாம் இனி பத்திரப்பதிவு துறைக்கு போக தேவையில்லை!! சார்பதிவாளருக்கு போட்ட அதிரடி உத்தரவு!!
பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர்கள் பலர் சிறு சிறு பிழைகளுக்காக ஆவணத்தாரர்களை அவ்வபோது அழைத்து அலைக்கழித்து வருகின்றனர். இவ்வாறான பிழைகளுக்கு இனி ஆவணத்தாரர்களை அழைக்கக்கூடாது என்று பதிவுத்துறை தலைவர் திட்டவட்டமாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பத்திரப்பதிவு உள்ளிட்ட பல வேலைகளுக்காக வரும் நபர்களிடம் சார்பதிவாளர்கள் சிறு பிழைகளை சுட்டிக்காட்டி அலைக்கழித்து வருவதாக பதிவுத்துறை தலைவருக்கு புகார் சென்றுள்ளது. குறிப்பாக அவ்வாறு சுட்டிக்காட்டும் பிழைகள் ஏதும் ஆவணதாரருக்கு முறையாக கூறாமல் வேறு ஒரு சார்பதிவாளருக்கு தெரிவிக்கின்றனர். இதனால் இருவருக்கிடையே குழப்பம் நிலவி ஆவணத்தாரர் அலைக்கழிக்க படுகிறார்.
அந்த வகையில் ஆவணத்தாரர் ஒருவரின் விற்பனை பத்திரப்பதிவில் ஏற்பட்ட பிழை குறித்து நீதிமன்றம் வரை சென்று பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு நடவடிக்கை எடுக்கும் படியும் கூறியுள்ளது. ஒரு சார் பதிவாளர் தனக்கு கீழ் வரும் தரவுகளை தங்களது அலுவலக எல்லைக்குள் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட நபரிடம் தெரிவிக்க வேண்டும்.
இதனை தவிர்த்து அவரிடம் எந்த ஒரு தகவலும் அளிக்காமல் இது குறித்து வேறொரு சார்பதிவாளருக்கு மாற்றப்படுவது மிகவும் தவறு. அதுமட்டுமின்றி சிறு சிறு பிள்ளைகளுக்காக ஆவணத்தாரர்களை நேரில் அழைக்கக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.