1 ரூபாய் கூட வட்டி கட்டத் தேவையில்லை.. 3 லட்சம் வரை கடன் பெறலாம்!! எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா!!
கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.பெண் குழந்தைகள்,பெண்கள்,வயதான பெண்களுக்கென்று நிறைய சிறப்பான திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது.அதிலும் தொழில் செய்து சொந்த உழைப்பில் முன்னுக்கு வர நினைக்கும் பெண்களுக்கு வட்டியே இல்லாமல் 3 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கி வருகிறது.மகளிர் மேம்பாட்டு கழகம் செயல்படுத்தி வரும் இந்த பயனாளர் திட்டத்தில் பெண் விவசாயிகளும் பயன்பெற முடியும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.இந்த திட்டத்தில் SC/ST பெண்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது.இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு வணிக மற்றும் பொதுத்துறை வங்கிகளால் கடன் வழங்கப்படுகிறது.அதனோடு சிறப்பு தொழில் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.பிணை மற்றும் கட்டணம் ஏதும் இன்றி மத்திய அரசு வழங்கும் கடனை பெற்றுக் கொள்ள முடியும்.பயனாளர் திட்டத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000 அல்லது அதற்கு குறைவாக இருத்தல் அவசியம்.விதவை,ஊனமுற்ற பெண்களுக்கு ஆண்டு வருமான வரம்பு இல்லை.18 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
1)ஆதார் அட்டை
2)பிறப்புச் சான்றிதழ்
3)வருமானச் சான்றிதழ்
4)பான் அட்டை
5)வாக்காளர் அட்டை
6)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
7)ரேசன் அட்டை
8)வங்கி பாஸ்புக் நகல்
இத்திட்டத்தில் பயன்பெற அருகில் உள்ள வங்கிக்கு சென்று விண்ணப்பதை பெற்று பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் வங்கி மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.