புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை?.. கடுமையான ரூல்ஸ்! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை என ஆரம்பித்து பல குற்றங்கள் தினம் தோறும் நடந்து வருவதை அனைவரும் பார்த்து வரும் பட்சத்தில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுக்காக தனியார் நிறுவனம் ஒன்று இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்தனர்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்ததோடு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், பெண்களுக்கு எதிராக பல குற்றங்கள் ஏற்படும் இந்த காலகட்டத்தில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் தொடங்கி காத்மண்டில் இந்த பயணத்தை முடிக்க உள்ளனர்.
அது மட்டுமின்றி தற்பொழுது வரப்போகும் புத்தாண்டை முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் பேரிக்கார்டு வைப்பதாக தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி புத்தாண்டை முன்னிட்டு இளைஞர்கள் போதையில் வண்டிகளை இயக்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
அதனை மீறுபவர்களின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,அதிவேகத்தில் வண்டிகளை இயக்குபவர்களை கண்காணிக்க மூன்று கண்காணிப்பு படை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.தற்பொழுது வரை 30 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி அவினாசி மற்றும் திருச்சி நெடுஞ்சாலைகளில் குடித்துவிட்டு ரகளை செய்யக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.இந்த கோட்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.