இனி வாட்ஸ் ஆப் தகவலை யாராலும் பார்க்க முடியாது!! நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட்!!
தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய அப்டேட்டை அறிவித்திருந்தது. தற்போது அந்த அப்டேட் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200 கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அவர்களின் வசதிகேற்ப அடிக்கடி வாட்ஸ் ஆப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது.
சில நாட்கள் முன்பு வாடிக்கையாளர்களுக்கு வசதியாக தங்கள் பழைய போனில் இருக்கும் அனைத்து தகவல்களையும் புதிய போனிற்கு எளிதாக மாற்றி கொள்ளும் வசதியை அறிவித்திருந்தது. அதன் பின் மோசடி நடக்காமல் தடுக்க வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்டை அறிவித்திருந்தது. அந்த புதிய வசதி silence unknows callers ஆகும். இந்த வசதி மூலம் தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வராது என்று அறிவித்திருந்தது.
அதனையடுத்து ஏற்கனவே சில வாரங்கள் முன்பு ஒரு வாட்ஸ் ஆப் கணக்கை 4 டிவைஸ்களில் லாகின் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்திருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த முறை மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து whats app web மூலம் விடோஸியில் லாகின் செய்யும் க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்யமால் மொபைல் நம்பரை பதிவு செயதவுடன் எட்டு இலக்கு otp எண்ணை பதிவு செய்ததுடன் whats app லாகின் செய்து கொள்ள முடியும். இதனால் வாட்ஸ் அப் கணக்கை எளிதில் லாகின் செய்து கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அப் கால், மெசேஜ், வீடியோ கால், சாட்லாக், லாஸ்ட் ஸீன் சென்ற அனைத்து பயனாளர்கள் மட்டுமே அறிந்து கொள்ளும் வசதியை வழங்கி வருகிறது. இது போன்ற புதிய அப்டேட்களை வாட்ஸ் ஆப் நிறுவனம் அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த புதிய அப்டேட்கள் பயனாளர்களுக்கு பாதுகாப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.