இன்னும் யாருக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை… வீடியோ வெளியிட்டு சுதந்திர தினத்தன்று வேலையை ராஜினாமா செய்த காவலர்…

0
99

 

இன்னும் யாருக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை… வீடியோ வெளியிட்டு சுதந்திர தினத்தன்று வேலையை ராஜினாமா செய்த காவலர்…

 

இன்னும் யாருக்குமே சுதந்திரம் கிடைக்கவில்லை என்று பரபரப்பான வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து காவலர் ஒருவர் சுதந்திர தினமான நேற்று(ஆகஸ்ட்15) காவலர் வேலையை இராஜினாமா செய்துள்ளார்.

 

இந்தியா ஆங்கிலேயர்களிட் இருந்து சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் முடிந்ததை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியான நேற்று நாடு முழுவதும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், இரயில்வே நிலையங்கள் போன்ற இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும், மசூதிகளுக்கு முன்னரும் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

 

இந்நிலையில் நாட்டில் யாருக்கும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் 76வது சுதந்திர தினமான இன்று(ஆகஸ்ட்15) என்னுடைய வேலையை ராஜினாமா செய்கின்றேன் என்றும் காவலர் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

அந்த காவலர் வெளியிட்டுள்ள வீடியோவில் காவலர் “தேசத்தில் வாழும் அனைத்து சொந்தங்களுக்கும் என்னுடைய காலை வணக்கம். என்னுடைய பெயர் கார்த்திக். நான் இராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரையில் உள்ள காவல் நிலையத்தில் முதல்நிலை காவலாரக பணிபுரிந்து வருகிறேன்.

 

இந்த தேசத்திருநாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றும் நாம் அனைவரும்(சமூகம்) சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த தேசத்திற்காகவும், சமூகத்திற்காகவும் நான் என்னுடைய உயிராய் நேசிக்கும் எனது காவலர் பணியை சுதந்திர தினமான இன்று(ஆகஸ்ட்15) ராஜினாமா செய்கிறேன். நன்றி வணக்கம். ஜெய் ஹிந்த்” என்று கூறியுள்ளார்.

 

Previous articleசொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்… தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை!!
Next articleகுறையாத காவாலா பாடல் வைப்….ஜப்பான் நாட்டு தூதர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல்…