யாரும் கட்சியில் இருந்து விலகவில்லை!! உளவு பார்ப்பதற்கு அனுப்பி வைக்கிறோம்!! சீமானின் பரபரப்பு பேச்சு!!

Photo of author

By Jeevitha

யாரும் கட்சியில் இருந்து விலகவில்லை!! உளவு பார்ப்பதற்கு அனுப்பி வைக்கிறோம்!! சீமானின் பரபரப்பு பேச்சு!!

Jeevitha

The next divorced couple is Nayan Vicky who saw Dhanush in a different situation!!

நாம் தமிழர் கட்சி: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், எங்கள் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை. நாங்கள் தான் அவர்களை உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைக்கிறோம் என கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து தொடர்ந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். அதில் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினார். மேலும் அதை தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் உள்ள சுகுமார் விலகுவதாக அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த நிலையில் கட்சியில் இருந்து விலகிய பிறகு பிரபாகரன் சீமான் மீது பல குற்ற சாட்டுகளை வைத்தார். சுகுமார் நான் இதுவரை செய்த செயல்கள், உடல் உழைப்பு, பண விவரம் என எதை பற்றியும் அவர் பொருட்படுத்தவில்லை. இது எனக்கு மட்டும் அல்ல கட்சியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் என அவர் கூறியிருந்தார்.

மேலும் அவரிடம் நான் கேட்பது பணமோ பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதையை தான் என கூறியிருந்தார். இப்படி கட்சியில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் விலகுவதை வைத்து செய்தியாளர்கள் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானிடம் கேட்ட போது, அவர் எங்கள் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை. நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம். மற்ற கட்சிகளில் உளவு பார்ப்பதற்கு அனுப்பி வைக்கிறோம் என கூறினார்.