TVK: தமிழக அரசியல் களத்தில் புதிதாக வந்த விஜய்யை நெருக்கடிக்கு தள்ளும் விதத்தில் தான் ஆளும் கட்சி பல குடைச்சல்களை கொடுத்து வருகிறது. எந்த நடிகருக்கும் கிடைக்காத வரவேற்பானது விஜய்க்கு கிடைத்துள்ளது. இது வெறும் மாயை தான் என பலர் கூறினாலும் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றவர்களுக்கும் இப்படித்தான் வரவேற்பு இருந்தது என அனைவரும் உணர்கின்றனர்.
அதை வைத்து இவரை ஆரம்ப கட்டத்திலிருந்து மூலையில் உட்கார வைத்து விட்டால் எந்த பிரச்சனையும் நேராது என எண்ணுகின்றனர். மேலும் அதிமுக பாஜக போன்ற கட்சிகள் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என முயற்சிக்கிறது. அந்த வகையில் ஆளும் கட்சி கொடுக்கும் தொந்தரவுகளில் உச்சகட்டமாக கரூர் உயிரிழப்பு தான் இருந்தது.
ஒவ்வொரு பிரச்சாரத்திற்கு செல்லும் போது ஏதேனும் தடங்கல்கள் இருந்த நிலையில் கரூரில் மட்டும் கட்டுப்படுத்த முடியாத கூட்டமும் அதற்கு ஏற்ற காவல் பாதுகாப்பும் இல்லை. இதனால் 41 பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது. இதை வைத்து ஒவ்வொரு கட்சியிலும் விஜய்யை ரவுண்டு கட்ட ஆரம்பித்தனர். அதிலும் திமுக, விஜய் மீது வழக்கு மேல் வழக்கு போட்டு இனி பிரச்சாரம் என்பதே இருக்கக் கூடாது எனக் கூறினர்.
ஆனால் கைது நடவடிக்கை மட்டும் செய்யவில்லை. இவ்வாறு செய்துவிட்டால் இவர்களே அவரை அடுத்த கட்ட பெரியாளாக்கி விடுவார்கள் என்பதால் அதனை இறுதிவரை செய்யவில்லை. விஜய் இந்த கரூர் பிரச்சனையிலேயே மிகவும் தொய்வடைந்துவிட்டார். அரசியலே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார். ஆனால் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைப்படி மீண்டும் புதிய ஊந்துதலுடன் தொடங்கியுள்ளார்.
அப்படி இருப்பவருக்கு தான் தற்போது பீகாரின் சட்டப்பேரவை முடிவானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல முக்கிய கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வியூக அமைப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் ஒரு தொகுதியில் கூட இடம்பெறவில்லை. அவருக்கே அந்த நிலை என்றால், நம்மால் என்ன செய்து விட முடியும் என மீண்டும் சிந்திக்கிறாராம். அரசியல் சார்ந்த அனுபவமும் பயிற்சியும் அதிகம் தேவை என உணர்ந்த விஜய் அரசியல் பயணத்தை ரத்து செய்யப் போவதாக பேச்சு அடிபட்டு வருகிறதாம்.

