மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வாய்ப்பில்லை? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

Photo of author

By Parthipan K

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வாய்ப்பில்லை? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

மத்திய அரசானது கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய  திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் கிடைப்பதில்லை எனவும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் கடந்த தேர்தலின் பொழுது தேர்தல் வாக்குறுதியாக திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு விதமான வாக்குறுதிகளை அளித்தது. அதில் திமுகவின்  வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வு திட்டமானது அமல்படுத்தப்படும் என  கூறியிருந்தது.

எதிர்பார்த்தபடி திமுக ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்பவும் துணை ரீதியாக அனைவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.ஆனால் நிதித்துறை அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படாத ஊழியர்களின் விவரங்களை பெறுவதற்காகவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

நீதிமன்றம் வழக்கிற்காகவே புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.இதனை கேட்ட அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது என மீண்டும் கேள்வி எழுந்து வருகின்றது.