TNPSC தேர்வுகளில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை இல்லை!! தமிழக அரசின் புதிய தகவல்!!

Photo of author

By Rupa

TNPSC தேர்வுகளில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை இல்லை!! தமிழக அரசின் புதிய தகவல்!!

தமிழ்நாட்டில் நடத்தப்படும் அரசு தேர்வுகளில் பிற்படுத்தப்பட்டோர் , உடல் ஊனமுற்றோர், விதவை போன்ற அனைவருக்கும் அரசு தேர்வு எழுதுவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

இதற்குரிய கோட்பாடுகள் குறித்தும் தமிழக அரசு அவபோது அறிக்கையாக வெளியிடும். அந்த வகையில் கடந்த ஆண்டு குரூப் 4 கான தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது.

அதில் மாற்றுத்திறனாளிகள் என ஆரம்பித்து இன சுழற்சி வரை வழங்கப்படும் முன்னுரிமை குறித்து தெரிவிக்கப்பட்ட நிலையில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை என்று எந்த ஒரு தகவலையும் அதில் குறிப்பிடவில்லை.

இதனால் இந்த அறிவிப்பை ரத்து செய்யும்படியும் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கூறி சித்தார்த் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது இன்று அமர்வுக்கு வந்தது. இதில் தமிழக அரசு சார்பில் வாதாடிய நீதிபதி கூறியதாவது, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அதாவது எம்பிளாய்மெண்ட் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு மட்டுமே கலப்பு திருமணம் ஒப்புக்கொள்ளப்படும். பணியாளர்கள் முறை வைத்த தேர்வாணையம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை கிடையாது. இது தமிழக அரசின் கொள்கைகளுள் ஒன்று என அவர் கூறினார்.

இருதரப்பு வாதங்களும் கேட்டிருந்த வழக்கறிஞர் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியவர் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது.