சனிக்கிழமைகளில் பள்ளி இல்லையா? பாடத்திட்டங்களை முடிக்க வெளிவந்த அதிரடி உத்தரவு!

Photo of author

By Rupa

சனிக்கிழமைகளில் பள்ளி இல்லையா? பாடத்திட்டங்களை முடிக்க வெளிவந்த அதிரடி உத்தரவு!

Rupa

Do not teach students! Announcement made by the Minister of School Education due to monsoon rains!

சனிக்கிழமைகளில் பள்ளி இல்லையா? பாடத்திட்டங்களை முடிக்க வெளிவந்த அதிரடி உத்தரவு!

பருவமழை காரணமாக சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விடுமுறை அளிப்பதால் நடப்பாண்டின் பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது, பருவமழை காரணமாக தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாடத்திட்டங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. மற்ற வருடங்களைப் போல இந்த வருடத்திலும் பாடங்கள் முடிக்கப்படாமல் விடக்கூடாது. கட்டாயம் இந்த ஆண்டு பாடத்திட்டங்கள் அனைத்தும் முடிக்க வேண்டும்.

அதனையொட்டி விடுமுறை நாட்களுக்கு இணையாக சனிக்கிழமைகளில் பள்ளியை நடத்திக் கொள்ளலாம். சனிக்கிழமைகளில் பள்ளி நடைபெறும்  அந்நாளில் முடிக்காத பாடத்திட்டங்கள் அனைத்தும் முடிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அந்தந்த மாவட்ட சூழலுக்கு ஏற்ப வகுப்புகள் அமைத்து பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.