இனி கல்லூரி மாணவர்கள் படிக்கவில்லை என்றாலும் கவலையில்லை! இதோ வந்துவிட்டது அதற்கான புதிய திட்டம்!
தமிழகத்தில் மாணவ மற்றும் மாணவிகள் கல்வி நிலையத்தை விட்டு வெளியே செல்லும் போது வேலை கிடைக்கவும், இடையில் நின்ற மாணவ மாணவிகளின் அவர்களது திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், வாழ்க்கையில் அடுத்தடுத்த படி மேலே உயரவும் மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் ஆகிய எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகளில்பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு எவ்வாறு வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டுதலின் படி அவர்களுக்கு அறிவுரை வழங்கலாம்? வரும் காலங்களில் தேர்விற்கு எப்படி எல்லாம் தயாராவது என்பது போன்ற சிறந்த வழிமுறை களையும், மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் தகவல்கள் பயிற்சி பாடத்தில் இருக்க வேண்டும். இது குறித்து மேலும் சிறந்த ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.எனவே முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் இந்த பயிற்சி வகுப்பில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவுத்திறன்களையும்,புத்துணர்ச்சியும் மேம்படுத்துவதற்கு ஆசிரியராகிய நீங்கள் தான் துணை நிற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.