கொரோனா மூன்றாவது அலை தொடர்பான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்!
சென்னையில் சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் தடுப்பூசி முகாம் நேற்று தான் தொடங்கப்பட்டது, இதை அமைச்சர் சுப்பிரமணியன் தான் தொடங்கி வைத்தார். அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது,தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள்,கர்ப்பினியர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போட சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அடுத்தக் கட்டமாக ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி தடுப்பூசி போடப்படும் என்று கூறியிருக்கிறார்.
திருவண்ணாமலை,ராமேஸ்வரம்,நாகூர்,வேளாங்கண்ணி போன்ற ஆன்மீகத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தடுப்பூசி போட அங்குள்ள மாவட்ட கலெக்டர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.மத்திய அரசு தமிழகத்திற்கு 1.80 கோடி தடுப்பூசிகள் வழங்கி உள்ளதாக கூறியுள்ளார் 4.76 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் இரண்டு நாட்களுக்கு முன்பாக 30 லட்சம் தடுப்பூசி வந்ததாகவும் அதை பயன்படுத்துவதில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் உண்மைக்குப் புறம்பான செய்தியை தெரிவித்திருக்கிறார்.
இரு தினங்களுக்கு முன் 3 லட்சம் தடுப்பூசிகள் தான் வந்தன, ஜூன் மாதம் 5 லட்சம் தடுப்பூசிகளை வீண் அடித்ததாக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பூ கூறியதில் ஏதும் உண்மைகள் இல்லை,அதிமுக ஆட்சியில் 3 லட்சம் பிடிக்கப்பட்டுள்ளன என்று கூறியிருக்கிறார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வழங்கிய பயிற்சியில் 2 மாதத்தில் 7 லட்சம் தடுப்பூசிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் காரியாபட்டி குழந்தைகள் காப்பகத்தில் 43 குழந்தைகளுக்கு டெல்பிளஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா இல்லை என்ற முடிவுகள் தான் வந்தன.கொரோனா மூன்றாவது அளவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்கள் தயார் நிலையில்தான் உள்ளன. தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. மூன்றாவது அலைத் தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அமைச்சர் சுப்ரமணியன் கூறினார்.