இன்று முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது இதனை முன்னிட்டு வரும் நான்காம் தேதி வரையில் சில பகுதிகளில் கனமழையும் பல பகுதிகளில் மிதமான மழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும் நகரின் ஒரு சில தொகுதிகளில் மிதமான மழையும் செய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்றும் சொல்லப்படுகிறது.
கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
திருவள்ளூர் ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர் மற்றும் புதுவையில் சில பகுதிகளில் கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.