இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் ராணுவத்தில் வேலை!

0
62

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் 186 பணியிடங்கள் உள்ளன. பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி உடையவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரமானது பின்வருமாறு, மொத்தம் 156 பணியிடங்கள் உள்ளன. அதில் கான்ஸ்டபில் 158, ஹெட் கான்ஸ்டபிள் 28 இடங்கள் உள்ளன.

இப்பணிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை உள்ளது.

இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். www.recruitment.itbpolice.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பணிக்கான கல்வி தகுதியானது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது மோட்டார் மெக்கானிக் பிரிவில் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவச் சான்றிதழ் வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

தலைமை காவலர் பதவிக்கு மாத சம்பளமாக ஜூன் ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வரையும், காவலர் பதவிக்கு மாத சம்பளமாக ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தேர்வு செய்யும் முறையானது எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

author avatar
Parthipan K