இவர்களுக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
திமுக ஆட்சி அமர்த்தி இன்றுடன் நான்கு மாதங்கள் ஆகிறது.திமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவாதாக 502 வாக்குறுதிகளை கூறியது.அதில் தற்போதுவரை 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக கூறியுள்ளார்.அதன் சம்மதமாக இன்று ஸ்டாலின் அவர்கள் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதுமட்டுமின்றி மீதமுள்ள வாக்குறுதிகளும் கூடிய விரைவில் நிறைவேற்றுவதாக கூறியுள்ளார்.அந்தவகையில் அவர்கள் நிறைவேற்றிய திட்டத்தில் முக்கியாமான ஒன்று நகைக்கடன் தள்ளுபடி ஆகும்.
இந்த நகைக்கடன் தள்ளுபடி திட்டம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது.அந்தவகையில் இந்த 5 பவுன் தள்ளுபடி திட்டத்தில் பல விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.முதலாவதாக இந்த நகை தள்ளுபடியில் முறைக்கேடுகளில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி 5 பவுனுக்கு மேல் உள்ள நகைகள் தள்ளுபடி செய்ய மாட்டாது என்றும் கூறியுள்ளனர்.அதேபோல ஓர் நகை 5 பவுனுக்கு மேல் அதாவது 200,300 மில்லி அளவிற்கு அதிகாமாக இருந்தால் கூட நகை தள்ளுபடி செய்ய மாட்டாது என்று கூறியுள்ளனர்.
நாம் பொதுவாக நகை கடைக்கு சென்று நகை வாங்கும் போது 100 மில்லி 200 மில்லி அதிகாமா இருக்கும் அதனை தனியாக குறிப்பிட்டு ஏதும் சொல்ல மாட்டார்.மொத்தமாக 5 பவுன் என்றே வரையறுக்கப்படும்.ஆனால் தற்போது இந்த நகைக்கடன் தள்ளுபடியில் 100 மில்லிக்கு அதிகாமாக இருந்தால் கூட எந்த நகையும் தள்ளுபடி செய்ய மாட்டாது என்று கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி 5 பவுனுக்கு மேலாக ஓர் மில்லி அளவிற்கு அதிகமாக இருந்த நகைகள் அனைத்தும் நகைக்கடன் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
அவ்வாறு வைத்திருந்தவர்கள் தங்கள் பெயர்,பட்டியலில் இல்லாததை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.மேலும் விவசாயிகள் சங்க தலைவர் முதல்வரிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.ஏழை,நடுத்தர மக்களுக்கு கூடுதலாக மேலும் 1 பவுன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அதுமட்டுமின்றி தகுதியான நபர்களை பரிந்துரைக்க கூட்டுறவு சங்க அளவில் குழு ஒன்று அமைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.இந்த குழுவானது சங்க செயலாளர்,சங்க மாநிலத்தலைவர்,முன்னாள் சங்க தலைவர் போன்றோர்களை கொண்டு அமைக்கலாம் என்றுரைத்தார்.