பொங்கலுக்கு எல்லாம் ரிலீஸ் இல்லை! தங்கலான் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதோ!!

0
277
#image_title
பொங்கலுக்கு எல்லாம் ரிலீஸ் இல்லை! தங்கலான் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதோ!!
நடிகர் சியான் விக்ரம் அவர்கள் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி தங்களின் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்பது தெளிவாக தெரிந்துவிட்டது.
நடிகர் சியான் விக்ரம் அவர்கள் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தை இயக்குநர் ப.ரஞ்சித் அவர்கள் இயக்கியுள்ளார். தங்கலான் திரைப்படத்தில் நடிகர்கள் பசுபதி, மாளவிகா மேகனன், பார்வதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கல்டகிரோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தங்கலான் திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஸ்டாலினை கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா அவர்கள் தங்கலான் திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதையடுத்து தற்பொழுது தங்களின் படக்குழு இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதாவது தங்கலான் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியையும், டீசர் வெளியாகும் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி தங்கலான் திரைப்படம் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. மேலும் தங்கலான் திரைப்படத்தின் டீசர் நவம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
தங்கலான் திரைப்படம் கோலார் தங்கச் சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட வேதனையையும் துயரத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கலான் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Previous articleநடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்! நல்லபடியாக நடந்து முடிந்த பூஜை!!
Next articleஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரிக்கவுள்ள டாடா நிறுவனம்! மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிக்கை!!