நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்! நல்லபடியாக நடந்து முடிந்த பூஜை!!

0
32
#image_title

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்! நல்லபடியாக நடந்து முடிந்த பூஜை!!

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கும் 234வது திரைப்படமான கே.ஹெச்234 திரைப்படத்தின் பூஜை நேற்று(அக்டோபர்26) நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தில் இணைந்து பணியாற்றவிருக்கும் சண்டைப் பயிற்சியாளர், சினிமோட்டோகிராபர், இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்ள கே.ஹெச்233 திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடித்த பிறகு நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் 234வது படமான கே.ஹெச் 234 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் 36 வருடங்களுக்கு பின்னர் இணையும் கே.ஹெச் 234 திரைப்படத்தின் பூஜை நேற்று(அக்டோபர்26) நடைபெற்றது. இந்த பூஜை வீடியோவை படக்குழுவினர் இன்று(அக்டோபர்27) வெளியிட்டுள்ளனர். மேலும் கே.ஹெச் 234 திரைப்படத்தில் பணியாற்றவுள்ள கலைஞர்கள் பற்றிய அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன் படி கே.ஹெச் 234 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைக்கவுள்ளார். சண்டைப் பயிற்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் மேற்கொள்ளவுள்ளனர். கே.ஹெச் 234 திரைப்படத்திற்கு ரவி கே சந்திரன் அவர்கள் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

கே.ஹெச் 234 திரைப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் அவர்கள் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளவுள்ளார். மேலும் கே.ஹெச் 234 திரைப்படத்தை கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ப்லிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், உதய்நிதி ஸ்டாலின் அவர்களின் ரெட்ஜெய்ன்ட் நிறுவனமும், இயக்குநர் மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரிக்கவுள்ளது. மேலும் கே.ஹெச் 234 திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.