எங்கள் கலகத்தலைவனை பார்க்க அனுமதி இல்லையா? திமுக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு!

Photo of author

By Rupa

எங்கள் கலகத்தலைவனை பார்க்க அனுமதி இல்லையா? திமுக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு!

கன்னியாகுமரியில் அலுவலகம் திறப்பு, மீனவர்கள் சந்தித்தல் மற்றும் வீடு தோறும் உள்ள இளைஞர்களை இளைஞர் அணி உறுப்பினராக சேர்த்தல் என பல்வேறு திட்டங்களை முன்வைத்து உதயநிதி ஒவ்வொரு மாவட்டமாக செல்கிறார்.அந்தவகையில் கன்னியாகுமரி சென்றுள்ளார். கன்னியாகுமரிக்கு சென்ற உதயநிதிக்கு அங்குள்ளவர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.

பின்பு அவர் அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கினார். அவர் தங்கும் விடுதியில் பலரும் அவரை காண சென்றனர். அந்த வகையில் முன்னாள் திமுக எம்எல்ஏ ஆஸ்டின் மற்றும் முன்னாள் எம்பி ஹெலன்டேவிட்சன் ஆகியோர் உதயநிதியை காண சென்றுள்ளனர். ஆனால் பந்தோபஸில் இருந்த திமுக தொண்டர்கள் இவர்களை உள்ளே விட மறுத்தனர்.

உதயநிதியை காணும்படி மீண்டும் இவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அங்கு இருந்த தொண்டர்கள் இவர்களை விடாமல் தொடர்ந்து மறுத்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்திலே கைகலப்பில் முடிந்தது. மாறி மாறி இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது. இவர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.