பெண்கள் முக அழகை பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.இதற்காக ஆபத்தை விளைவிக்கும் இரசாயன கலந்த க்ரீமிகள்,பேஸ் வாஸ்,பேஸ் பேக் உள்ளிட்டவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர்.இதனால் இளம் வயதிலேயே முகச் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தை அடைகின்றனர்.இந்த சரும பாதிப்புகளை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள பயனுள்ள குறிப்பை பின்பற்றி பலனடையவும்.
தேவையான பொருட்கள்:
1)கற்றாழை ஜெல்
2)தேங்காய் எண்ணெய்
செய்முறை:
கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல் இதற்கு பயன்படுத்தக் கூடாது.இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட கற்றாழை ஜெல்லை தான் பயன்படுத்த வேண்டும்.
கற்றாழை மடலை தோல் நீக்கி விட்டு ஜெல்லை ஒரு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை க்ரீம் பதத்திற்கு அரைத்து 10 மில்லி தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு டப்பாவில் சேமிக்கவும்.
இந்த க்ரீமை முகத்திற்கு பயன்படுத்தி வருவதன் மூலம் சரும சுருக்கப் பிரச்சனைக்கு தீர்வு காண இயலும்.
தேவையான பொருட்கள்:
1)பப்பாளி
2)பால்
3)மஞ்சள் தூள்
செய்முறை:
ஒரு கீற்று பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி காய்ச்சாத பால் மற்றும் 1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து முகத்திற்கு அப்ளை செய்யவும்.
30 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி முகத்தை கழுவவும்.இப்படி செய்வதை வழக்கமாக்கி கொண்டால் முகச் சுருக்கம் நீங்கி இளமை பொலிவு ஏற்படும்.
தேவையான பொருட்கள்:
1)வெள்ளரிக்காய்
2)தயிர்
செய்முறை:
ஒரு பிஞ்சு வெள்ளரிக்காயை நான்கு ஐந்து துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.பிறகு மிக்ஸி ஜாரில் இதை போட்டு இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து அரைக்கவும்.இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை பண்ணி வாஷ் செய்து வந்தால் முகச் சுருக்கப் பிரச்சனை சரியாகும்.