விஜய் டிவிக்குள் நுழையும் அனைவரும் சிவகார்த்திகேயன் ஆகிவிட முடியாது!! நடிகர் ஆர்.ஜே பாலாஜி!!

Photo of author

By Gayathri

நடிகர் ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ள நிலையில், சொர்க்கவாசல் பட குழு இப்படத்திற்கான பிரமோஷனல் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில், நடிகர்கள் செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் வரும் 29-ம் தேதி திரையரங்குகளில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேட்டியளித்த ஆர் ஜி பாலாஜி அவர்கள் விஜய் டிவியில் காலடி எடுத்து வைப்பவர்கள் அனைவரும் சிவகார்த்திகேயனை போல் வந்து விட வேண்டும் என நினைப்பது முட்டாள் தனம் என தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய ஆர் ஜே பாலாஜி தெரிவித்திருப்பதாவது :-

விஜய் டிவியில் திட்டம் போட்டு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சிவகார்த்திகேயன் மாதிரி வந்துவிடலாம் என்று நினைக்கின்றனர் என்றும், ஆனால் அப்படியெல்லாம் யாராலும் வரமுடியாது.

மேலும், சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் மிக சிறப்பான வேலை மற்றும் திறமையை வெளிப்படுத்தியதால் மக்கள் அனைவருக்கும் பிடித்தது என்றும், இதனால் மட்டுமே விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன் இந்த நிலைமைக்கு வந்துள்ளார் என்று நடிகர் ஆர் ஜே பாலாஜி அவர்கள் கூறியிருக்கிறார்.