தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் வரும் 12ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. எனவே தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அனைத்தும் மிகத் தீவிரமாக தங்களுடைய வேலைகளை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில், வேட்புமனுத்தாக்கல் குறித்த விதிமுறைகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார். வேட்புமனு தாக்கல் செய்யும் சமயத்தில் வேட்பாளருடன் இரண்டு நபர்கள் மட்டுமே வர வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் சத்யபிரதா சாகு.அதேபோல மார்ச் மாதம் 19 ஆம் நாள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வேட்புமனு தாக்கல் நடைபெறாது என்று தெரிவித்திருக்கிறார் சத்யபிரதா சாஹூ.

வேட்புமனு தாக்கல் தொடங்கும் 12ஆம் தேதி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று தெரிவித்து இருக்கின்ற அவர் 88 ஆயிரத்து 936 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதால் கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பாக எல்லா அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

மொத்தமாக இருக்கின்ற வாக்குச்சாவடி மையங்களில் 50 சதவீத வாக்குச்சாவடி மையங்களில் வெப்கேமரா பயன்படுத்தப்படும் எனவும் இதன் மூலமாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடிகளில் நடைபெறுவதை நேரில் கண்காணிக்க முடியும் என்றும் அதே போல தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளும் இதனை கண்காணிக்க இயலும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் குறித்த புகார்களை பொதுமக்கள் எல்லோரும் 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது .பொதுமக்கள் தெரிவிக்கும் அனைத்து புகார்களும் ரெக்கார்ட் செய்யப்பட்டு அது சம்பந்தமான அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு தலைமைச்செயலகத்தில் இருக்கின்ற 1800 425 219 50 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார் சத்யபிரதா சாகு.