பேருந்துகளை இயக்க தயாராக இல்லை! வெளியான பரபரப்பு தகவல்!

0
137

பேருந்துகளை இயக்க தயாராக இல்லை! வெளியான பரபரப்பு தகவல்!

நேற்று தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்த நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தனியார் பேருந்துகளை இயக்கப்படமாட்டாது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

கொரோனாவின் ஆதிக்கத்தால் அனைத்தும் முடங்கிப் போயிருந்த நிலையில் பொது போக்குவரத்திற்கும் அனுமதி இல்லாமல் இருந்தது.

ஆனால் நேற்று நடைபெற்ற ஆலோசனையில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளையும் கொடுத்து உள்ளது.

அதுமட்டுமில்லாமல் சென்னையில் மெட்ரோ ரயில் செயல்படும் அனுமதியையும் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தகவலை வெளியிட்டுள்ளனர்.

மாவட்டத்திற்கு உள்ளே மட்டும் பேருந்துகள் செயல்பட அனுமதி அளித்ததால் தனியார் பேருந்துகளுக்கு வருவாய் கிடைக்காது என்பதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டாக சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இல்லையெனில் அனைத்து இருக்கைகளையும் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

Previous articleவேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு: மத்திய அரசு!!
Next articleபிக் பாஸ் சீசன் 4ல் டிக்டாக் கவர்ச்சி நாயகி இலக்கியாவிற்கு போட்டியாக களமிறங்கிய நடிகை யார் தெரியுமா? குதூகலத்தில் ரசிகர்கள்!!